Thursday, September 21, 2006

புனித ஹஜ் - அரசு மானியம் தொடர்பாக

அலகாபாத் உயர்நீதி மன்றம், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு பொருளாதாரச் சலுகைகள் வழங்குவதைத் தடுத்து வெளியிட்ட இடைக்கால ஆணைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரக்கு வேண்டி, ஏற்கனவே செய்துள்ள ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கு மட்டுமே, இத்தடை செல்லுபடியாகும் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

அரசு வழக்குரைஞர், இத்தடை வழங்கப்படவில்லையெனில், அரசுக்கு பெரும் பொருளிழப்பும், உலக அரங்கில் தலை குனிவும் ஏற்படும் என்று வாதாடினார். மேலும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் இந்திய ஹஜ் பயணிகள் தங்கும் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய அரசுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

அலகாபாத் உயர் நீதி மன்றம், தன் பார்வைக்கு வந்த சிவசேனாவின் (1995ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட !) மனுவை ஏற்று, ஹஜ் புனித யாத்திரை என்றில்லாமல், அனைத்து மத யாத்திரைகளுக்கும், மத்திய / மாநில அரசுகள் மானியம் / சலுகைகள் வழங்குவதற்கு, இடைக்கால தடை ஆனையை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு அரசு ஆவன செய்வதை தடை செய்யவில்லை.

எந்த மத யாத்திரைக்கும் அரசுப்பணத்தை செலவழிக்கக் கூடாது என்று இடைக்கால ஆணை சொல்வதால், இப்பிரச்சினை அரசியல் ஆக்கப்பட மாட்டாது என்று நம்பலாம் ! கத்தோலிகக் கிறித்துவர்கள் புனித பூமியாகக் கருதும் வாடிகனுக்கு யாத்திரை செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. அந்தந்த மதம் சார்ந்த அறக்கட்டளைகள், புனித மதப் பயணங்களுக்கு வேண்டிய உதவிகளை யாத்திரிகர்களுக்கு செய்யலாம் என்பது என் எண்ணம். உயர்நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த பிறகு, அரசும், அரசியல்வாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம் !

--- எ.அ.பாலா

* 233 *

81 மறுமொழிகள்:

said...

yes you are right sir. no money for muslim.

enRenRum-anbudan.BALA said...

சின்னபுள்ள,
nanRi.

Anony,
//yes you are right sir. no money for muslim.
//
I do not agree. NO ONE (hindu or muslim or christian) should be given subsidy for religious purposes.

ச.சங்கர் said...

சின்னபுள்ள

அரசு மானியத்தில் டிவி கொடுப்பது சரியா? :)

இலவசம் / மானியம் மாதிரி விஷயங்கள் இருக்கும் வரை ஓட்டுப் பொறுக்கிகள் அதை தமுக்கு சாதகமான வகையில் உபயோகித்துக் கொண்டே இருப்பார்கள்....

எனவே குடுப்பதை குறை சொல்லாமல் / தடை செய்யாமல் வாங்குவது / உபயோகிப்பது தவறு என வாதிடுவது சரியல்ல என்பது என் எண்ணம்

வஜ்ரா said...

"புனித ஹஜ் - அரசு மானியம்"

நவீன யுக ஜசியா...! அவர்களே வேண்டாம் என்றாலும் இவர்கள் போய் இந்திய வரிப்பணத்தைக் கொட்டுவார்கள்...திம்மித்தனம் என்று சொல்வதைத் தவிர இதை வேறு எப்படி சொல்வது...!

CT said...

Yes I too agree with this
"NO ONE (hindu or muslim or christian etc) should be given subsidy for religious purposes. "
I am just curious to know is there any other country is doing this kind of stuff.
I am not able to agree with this
"எனவே குடுப்பதை குறை சொல்லாமல் / தடை செய்யாமல் வாங்குவது / உபயோகிப்பது தவறு என வாதிடுவது சரியல்ல என்பது என் எண்ணம் "

In college days we used to tell something like this
"பிரீயா கொடுதா பினாயில் கூட குடிப்போம் ........"
so, as long as we have people who are expecting for this kind of free birds "ஓட்டுப் பொறுக்கிகள் " will utilize the ignorance of the poor people.People who are talking about social justice doesn't have nerve to ask why we don't have good schools or good teachers or why huge percentage of tamil nadu teachers are not coming to school............

---Now comedy Part ---------
1.For non religious people what government will do ...(Might be free ticket to PERIYAR movie with a coupon for POP and POPCORN).

enRenRum-anbudan.BALA said...

S Sankar, Vajra, CT,

Thanks for your comments !

ஜோ/Joe said...

//கத்தோலிகக் கிறித்துவர்கள் புனித பூமியாகக் கருதும் வாடிகனுக்கு யாத்திரை செல்வதற்கு அரசு ஏதாவது மானியம் / சலுகைகள் அளிக்கிறதா என்று விஷயம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது. //
பாலா,
அப்படி எதுவும் மானியம் இல்லை .அது போக வாடிகன் தான் கத்தோலிக்கரின் புனித பூமி என்பது சரியல்ல .வாடிகன் கத்தோலிக்க தலைமையகமும் போப்-பின் இல்லமும் இருக்கிற இடமே தவிர புனித யாத்திரை செய்ய கடமைப்பட்ட இடமாக பெரும்பாலும் யாரும் நினைப்பதில்லை .அதை விட அன்னை மேரி காட்சி கொடுத்ததாக நம்பப்படும் வேளாங்கண்ணி ,கார்மல் போன்ற இடங்களையே கத்தோலிக்கர்கள் புனித பூமியாக கருதுகிறார்கள் .நியாயமாக ஜெருசலேலும் ,பெத்தலகேமும் தான் கிறிஸ்தவர்களின் புனித தலம் .ஆனால் இங்கு நிலவும் சூழ்நிலை காரணமாக அங்கு செல்வது முகவும் அரிது .

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
தகவல்களுக்கு நன்றி. என்ன, ரொம்ப நாளா என் வலைப்பதிவு பக்கம் ஆளக் காணோம் ????
எ.அ.பாலா

வஜ்ரா said...

ஜோ,

இந்திய கிருத்தவர்கள் பொதுவாக டிமாண்ட் செய்வது கிடையாது. அவர்கள் integrate ஆகிவிட்டார்கள்..பொதுவான இந்து சமூகத்துடன்.

கடந்த இரண்டாண்டுகளில் 4 முறை இந்தியா சென்று வந்துள்ளேன்..ஒவ்வொறு முறையும் ஜெரூசலம் புனித யாத்திரை செய்யும் சிலரைப் பார்த்திருக்கிறேன்.

//
அதை விட அன்னை மேரி காட்சி கொடுத்ததாக நம்பப்படும் வேளாங்கண்ணி ,கார்மல் போன்ற இடங்களையே கத்தோலிக்கர்கள் புனித பூமியாக கருதுகிறார்கள் .
//

மேலும், இந்திய கிருத்தவர்கள் ஜெரூசலத்தைவிட வேளாங்கன்னியை புனிதத் தலமாக எண்ணினால் அதிக மகிழ்ச்சியே. நம்மூரில் உள்ள கோவில்களுக்குத் தராத மதிப்பை வெளி நாடுகளில் உள்ள இடங்களுக்குத் தருவதில் எனக்கு விருப்பம் இல்லை.

ENNAR said...

இலவசம் என்பது நாட்டின் புற்றுநோய் இது நாட்டையே அழித்துவிடும்

கால்கரி சிவா said...

எல்லாத்தையும் பிச்சை கொடுத்து ஆளாதிக்கம் இந்த அரசியல்வாதிகள் தான் நம் நாட்டின் வியாதிகள்

G.Ragavan said...

என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த மாதிரி இலவசங்களை நிறுத்த வேண்டும். ஹஜ் போவதற்கு என்று கொடுத்தால்...அடுத்து அமர்நாத் யாத்திரை என்று வரும். காசியாத்திரை இந்துக்களுக்குப் புனிதம் என்று சொல்லி காசி யாத்திரை போவதற்கும் கேட்பார்கள்.

இந்த முறை ஏற்பாடுகளைச் செய்து விட்ட படியால், விட்டு விடலாம். அடுத்த முறை கண்டிப்பாக இந்த இலவசம் கூடாது. தடுக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.

என்னைக் கேட்டால் இஸ்லாமியர்களே இதை மறுக்க வேண்டும். அதுதான் சரியானதென்று எனக்குத் தெரிகிறது.

அதற்கு மேலும் அரசாங்கம் குடுப்பேன் என்று சொன்னால் எல்லாருக்கும் கொடுக்கத்தான் வேண்டும். அதுதான் சரி.

ஜோ/Joe said...

வஜ்ரா,
தமிழக கிறிஸ்தவர்களுக்கு புனித யாத்திரை செல்ல தமிழகத்திலேயே நிறைய இடங்கள் இருக்கின்றன. உதாரணமாக வேளாங்கண்ணி ,பூண்டி ,பாண்டிசேரி அருகே வில்லியனூர் ,மதுரை அருகே வாடிப்பட்டி ,விருதாச்சலம் அருகே கோனான்குப்பம் ,நெல்லை அருகே கள்ளிக்குளம் ,குமரி அருகே வழுக்கம்பாறை என்று பல தலங்களுக்கு மக்கள் செல்கிறார்கள் .

நீங்கள் ஜெருசலேம் ,பெத்லகேம் போயிருப்பீர்கள் என நம்புகிறேன் .அது பற்றி ஒரு பதிவிடலாமே?

ச.சங்கர் said...

CT
தெளிவா குழப்பிட்டீங்க...நான் சொன்னது சரீன்றீங்களா..இல்லை அப்படீங்கறீங்களா...
நான் இலவசம் குடுக்குறது தப்பு அப்படீன்னு தானே எழுதியிருக்கேன்.

இல்லை நாந்தான் கொயப்பிட்டேனா:))

Hariharan # 03985177737685368452 said...

இத்தனைக்கும் ஹஜ் யாத்திரை இஸ்லாமில் ஐந்து கடமைகளில் ஒன்று என்றபோதும் இஸ்லாமாலேயே செய்தே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கப்படாத கடமைக்கு நம் Sickular அரசியல் வாதிகள் விழுந்தடித்து மானியம்/இலவசம் என்பது மதசார்பின்மையை நிலை நாட்டி ஓட்டுப் பிச்சைக்கு மினிமம் கியாரண்டி தேடுவதான செயலே!

யார் இங்க காசியாத்திரை / அமர்நாத் யாத்திரைக்கு மானியம்/உதவி தரவேண்டும் என்று ஹிந்துத்வா இந்துமத அடிப்படைவாதி மாதிரி ஒப்பீடு செய்தது!

இம்மாதிரி அவசியமற்ற மானிய முன்னுரிமைகளால் அரசு கஜானா காலியாக்கப்படுவதற்கு அந்த நிதியை கல்விக்கு புதிய கல்லூரிகள் தொடங்கப் பயன்படுத்தினால் இட ஒதுக்கீட்டிற்கு கூடுதல் இடங்களாவது கிடைக்கும்.

மதக் கடமைகள் தனிமனிதனுக்கானது. அரசுக்கு பாதுகாப்பு தவிர்த்து ஏதுமில்லை இங்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

arunagiri said...

நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் திம்மிமன்றம் (பாராளுமன்றம்) அதனை நீர்த்துப்போகும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து தனது "சிக்"யூலரிசத்தை நீரூபிக்கும். ஷாபானு விஷயத்திலிருந்து "ஆதாயமுள்ள பதவி" விஷயம் வரை பலவற்றிலும் இப்போக்கைப் பார்த்திருக்கிறோம்தானே.

dondu(#11168674346665545885) said...

என்ன பாலா இது, இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்கள்தானா?

அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Amar said...

இந்த முறை விட்டுவிட்டு அடுத்த முறையில் இருந்து நிறுத்திவிடலாம் என்று தான் நானும் நினைக்கிறேன்.

பன வசதியுள்ள இஸ்லாமியர்களுக்கு தான் ஹஜ் கட்டாயம் என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் பிரச்சனை இருக்காது.

enRenRum-anbudan.BALA said...

/./அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூ... /./
அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம்?
/./

... Edited by blog administrator... என்ன பதில் கூறுவது என்று கூட இருக்கலாம்.
BY (இது ஒரு பொருக்கி பதிவா..) 8:36 PM

enRenRum-anbudan.BALA said...

Sankar, Hariharan, Arunagiri, Dondu, Samudra,

கருத்துக்களுக்கு நன்றி !

இது ஒரு பொருக்கி பதிவா,
என்ன பதில் கூறுவது ?????????

dondu(#11168674346665545885) said...

"... Edited by blog administrator... என்ன பதில் கூறுவது என்று கூட இருக்கலாம்"
இது ஒரு பொருக்கிப் பதிவா,

என்னை ஏதோ திட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாலா அதை எடிட் செய்து விட்டார். அந்தத் திட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளாததால் உங்களுக்கே அவை உரித்தாகட்டும்.

எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம், உயர்சாதியம் என்றெல்லாம் எழுதுவதற்கெல்லாம் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது அல்லவா? இதற்கும் பதில் கொடுக்கட்டுமே. என்ன, ஏதாவது உருப்படியான பதில் கைவசம் இருக்க வேண்டும். அது இல்லாத போது பதிலையும் எதிர்ப்பார்க்க முடியாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

//பன வசதியுள்ள இஸ்லாமியர்களுக்கு தான் ஹஜ் கட்டாயம் என்று சொல்வார்கள் அல்லவா?
//


இசுலாமியச் சகோ யாராவது வந்து இதை தெளிவுபடுத்தினால் நல்லது.
எ.அ.பாலா

நல்லடியார் said...

பாலா மற்றும் டோண்டு ராகவன்,

இவ்விடயம் பற்றி ஏற்கனவே தமிழோவியத்தி அரவிந்த நீலகண்டனுக்கு பதிலிட்டிருக்கிறேன்.

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=7

சுருக்கமாக, புனித ஹஜ்ஜுப் பயணம் வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை. மத்திய அரசால் மானியம் என்ற பெயரில் திருப்பித் தரப்படும் தொகையானது, ஹஜ் யாத்ரிகர்கள் முன்பணமாக செலுத்தியதிலிருந்து ஒரு பகுதியாகும். சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு ஒரு சில ஆயிரங்களை திருப்பித் தருவது மானியம் அல்ல மாறாக, ஹஜ் செல்லவிருக்கும் யாத்திரிகர்களின் முன்பணம் ஆறு மாதங்களுக்கு முன்பே விமானச் சேவைக்குப் பயன்படுத்தப் பட்டு,அதில் கிடைக்கும் இலாபம் மானியம் என்ற பெயரில் திருப்பி கொடுக்கப் படும் சொற்ப பணத்தை விட அதிகம்.

யாத்திரிகர்கள் கொடுத்த பணத்தை மானியம் என்ற பெயரில் திருப்பித் தருவதை விட, விமான கட்டணத்தைக் குறைத்து, குறைந்த செலவில் அரசின் மானியம் இன்றி பெரும்பாலோர் ஹஜ் செய்ய உதவலாம்.

//நவீன யுக ஜசியா...! அவர்களே வேண்டாம் என்றாலும் இவர்கள் போய் இந்திய வரிப்பணத்தைக் கொட்டுவார்கள்...திம்மித்தனம் என்று சொல்வதைத் தவிர இதை வேறு எப்படி சொல்வது...!//

இந்துக்களின் ரிசிகேஷ் யாத்திரைக்கு அரசு கொடுக்கும் மானியம், சதவீதத்தில் செலுத்திய தொகையை விட அதிகம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 10-15 ஆயிரங்கள் வரை செலுத்தி, சுமார் 25% திருப்ப தரப்படுகிறது. ஆனால் ஹஜ்ஜுக்கு சுமார் என்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம் செலுத்தி 10-12 ஆயிரங்கள் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. இதற்கும் ஏதாவது ஒரு "_______தனம்" என்று சொல்லி வைத்தால் புண்ணியமாகப் போகுமய்யா! :-)

CT said...

Dear Mr.sankar,
Sorry for the trouble caused :-(
I understood what you are trying to communicate in this sentence
"எனவே குடுப்பதை குறை சொல்லாமல் / தடை செய்யாமல் வாங்குவது / உபயோகிப்பது தவறு என வாதிடுவது சரியல்ல என்பது என் எண்ணம் "
what I understood:You'r thought is we should blame the people who are giving free stuff and not the people who are getting it free and using.

I disagree with that thought.

My Point here is, as long as we have people who are expecting free stuff(Thought my next paragraph in my original review would have explained) , politicians will be keep giving.So I think it is wrong of people to get free and also to expect to get everything free in life.I would first blame people , then politicians.......

Otherwise I agree with your view that nothing should be given free.

Government should stop running the office for particular group of people , they should consider every one as a citizen ..........

If you think I have misuderstood your view or I have miscommunicated something wrong.Please feel free to correct........

Hope you will take the argument as sportive :-)

பணிவுடன்
CT

வஜ்ரா said...

//
ஆனால் ஹஜ்ஜுக்கு சுமார் என்பதினாயிரம் முதல் ஒரு இலட்சம் செலுத்தி 10-12 ஆயிரங்கள் மட்டுமே திரும்ப தரப்படுகிறது. இதற்கும் ஏதாவது ஒரு "_______தனம்" என்று சொல்லி வைத்தால் புண்ணியமாகப் போகுமய்யா! :-)
//

அய்யா...ஒரு லட்சம் ரூபாய் செலுத்துபவனுக்கு கூட 10-12 ஆயிரம் தேத்த முடியாதா...? அதுக்கு எதுக்கு அரசு வந்து உதவி செய்யவேண்டும்? அதைத்தான் திம்மித்தனம் என்றேன்.

Salahuddin said...

திரு. பாலா,

ஹஜ் மானியம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவிக்க எண்ணுகிறேன்.

1. முதலாவதாக, அரசு கொடுக்கும் பணம் உங்கள் பதிவின் தலைப்பில் சரியாக சொல்லியிருப்பது போல, மானியமே தவிர, சிலர் பின்னூட்டத்தில் சொல்வது போல, ஹஜ்ஜுக்கு இலவச டிக்கட் அல்ல.

2. ஹஜ் கமிட்டி மூலம் புனித யாத்திரைக்கு செல்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் கொடுக்கப் படுகிறது. தனியார் பயண நிறுவனங்கள் மூலமாக செல்பவர்களுக்கு இது வழங்கப் படுவதில்லை.

3. நல்லடியார் விளக்கமளித்திருப்பது போல இந்த மானியத்தொகை விமான நிறுவனத்தின் லாபத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே. வஜ்ரா குறிப்பிட்டதுபோல இந்திய வரிப்பணம் இதற்காக செலவிடப்படவில்லை.

4. 'லாபத்திலிருந்து திருப்பி கொடுத்தாலும் இந்திய அரசு வருமானத்தில் இழப்புதானே' என்று தோன்றலாம். இதை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது 'இந்த இழப்பு பெரிதல்ல' என்று தோன்றும். உதாரணமாக, மானியம் பெற்று ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் மூலமாக அரசுக்கு 10 கோடி லாபம் கிடைக்கிறது என்றும் அதில் பாதியை, அதாவது 5 கோடியை அரசாங்கம் மானியமாக திருப்பித் தருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அரசாங்கம் இனிமேல் மானியம் கிடையாது என்று அறிவித்தால், கூடுதலாக பணம் திரட்ட முடியாதவர்கள் ஹஜ்ஜுக்கு போக இயலாமல் ஆகும் (அத்தகைய வசதி இல்லாதவர்கள் மீது ஹஜ் கடமையே இல்லை என்பது வேறு விஷயம்!) அவ்வாறு ஹஜ்ஜுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்போது, விமானச்சேவை மூலமாக அரசுக்கு கிடைக்கும் லாபமும் குறையும். முன்பு 10 கோடி கிடைத்துக் கொண்டிருந்ததற்கு பதிலாக, 5 கோடியோ 6 கோடியோ கிடைக்கலாம். இதனோடு ஒப்பிட்டு பார்த்தால் மானியம் கொடுப்பதால் அரசுக்கு ஏற்படும் ஓரிரண்டு கோடி வருமானமிழப்பு ஒரு பெரிய விஷயமே அல்ல என்பது விளங்கும்.

5. மேலே குறிப்பிட்டது உதாரணம் மட்டுமே. உண்மை நிலை வேறு மாதிரியாகக் கூட இருக்கலாம். யாரிடமேனும் இது தொடர்பான புள்ளிவிபரங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6. பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே ஹஜ் கடமை. அப்படி வசதி படைத்தவர்கள் 'மானியம் கிடைக்கிறது' என்பதற்காக மட்டும் ஹஜ் செய்வதோ அல்லது மானியம் இல்லை என்பதற்காக ஹஜ் செய்யாமல் இருப்பதோ தவறு. மானியம் இல்லாது போனால் அதனால் பாதிப்படையப் போவது, எளிய ஒரு சிறு பிரிவினர்தான். மானியத்துடன் ஒருவர் ஹஜ் பயணம் செல்ல சுமார் 70,000 ரூபாய் ஆகிறது என்றால், இந்த எளியவர்கள் தம் குடும்பக் கடன், பிள்ளைகளின் படிப்பு, பெண்பிள்ளைகளின் திருமணம் போன்ற பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு, ரூ70,000 என்ற இலக்கை முன்வைத்து வருடக்கணக்கில் பணம் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். மானியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டால் அந்தக் கூடுதல் தொகையையும் சேமித்து தமது ஹஜ் கனவை நிறைவேற்ற இவர்கள் மேலும் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க நேரலாம். அல்லது ஹஜ்ஜுக்கு போக முடியாமலேயே கூட போகலாம்.

7. முஸ்லிம்கள் 'மானியம் வேண்டும்' என்று டிமாண்ட் செய்யவில்லை. அதே நேரத்தில், அரசே மானியம் அளிக்க முன்வரும்போது அதை வேண்டாம் என மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், இவர்கள் கட்டிய பணத்தில் ஒரு பகுதிதான் இவர்களுக்கு திருப்பி தரப்படுகிறது.

enRenRum-anbudan.BALA said...

நல்லடியார், சலாவுதின்,

விரிவாக விளக்கம் தந்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள். நீங்கள் கூறியிருப்பவை, பெரும்பாலும் நியாயமானவையே.

மானியமாகப் பெறுவது 10% (சிறிய) தொகையாக இருக்கையில், அதுவும் தேவையில்லை, நீதிமன்றம் / வழக்கு என்ற பிரச்சினையும் அனாவசியமாகிறது.

//யாத்திரிகர்கள் கொடுத்த பணத்தை மானியம் என்ற பெயரில் திருப்பித் தருவதை விட, விமான கட்டணத்தைக் குறைத்து, குறைந்த செலவில் அரசின் மானியம் இன்றி பெரும்பாலோர் ஹஜ் செய்ய உதவலாம்.
//
இது நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.

//7. முஸ்லிம்கள் 'மானியம் வேண்டும்' என்று டிமாண்ட் செய்யவில்லை. அதே நேரத்தில், அரசே மானியம் அளிக்க முன்வரும்போது அதை வேண்டாம் என மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
//
முழுதும் உடன்படுகிறேன்.

CT, வஜ்ரா,
கருத்துக்களுக்கு நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

test !

said...

ஒரே ஒருவார்த்தை,

அரசு மானியம் அளிக்காமல், எந்த விமான சேவை மூலமும் ஹஜ் செய்து கொள்ளலாம் என அதற்குரிய அனுமதியை அறிவித்தால் அப்புறம் தெரியும் ஏர் இந்தியாவின் வண்டவாளம். அரசு 'மானியம்' அளிப்பது ஹஜ் கமிட்டி மூலம் ஏர்பாடு செய்யப்படும் பாழாய்ப்போன ஏர் இந்தியா ஹஜ் பயணிகளுக்கு மட்டுமே.

இனியேனும் டம்மித் தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் இல்லாமல் பின்னூட்டம் இடச் சிலர் கற்றுக் கொள்ளட்டும்

Nambi said...

Do the temples / Masque/ Churches/ buy or pay rentals for the land? why should govt give the land for them? I dont agree with any concession for any religious set up.

Regards
Nambi

ஜடாயு said...

விளக்கங்கள் அளித்த இரு இஸ்லாமியர்களும், வேறு சிலரும் கூட இதை இஸ்லாமிய சமயப் பார்வையிலேயே பார்க்கிறார்கள் (like, வசதியுள்ள் முஸ்லீமுக்கே இது கடமை etc.) தவிர இந்திய அரசியல் சட்டம், அமைப்பு இவற்றின் அடிப்படையில் பார்ப்பதில்லை.

அது தான் பிரசினை. appeasement மற்றும் ஓட்டு வங்கியைக் குறிவைத்து ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு அரசுப் பணத்தில் மானியம் வழங்குவது என்பது என்பது ஒரு பாரபட்சமுள்ள அரசியல் நிலைப்பாட்டைக் குறிக்கிறது, வெறும் லாப, நஷ்டக் கணக்கை மாத்திரம் வைத்து இதை நியாயப் படுத்த முடியாது.

திருப்பதி கோயில் உள்ளிட்ட பல இந்துக் கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை அரசே எடுத்துக் கொள்கிறதே - அதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கர்நாடகாவில் கோவில்கள் வருமானத்தின் வரும் பணத்தை ஹஜ்-மற்றும்-உருதுமொழி வளர்ச்சிக்காக அரசு divert செய்துவந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப் படுத்தப் பட்டது !

எந்த மதப் புனிதத் தலங்களும் நம் நாட்டுக்குள் இருப்பதால் அந்தந்த இடங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை. அதில் appeasement எதுவும் இல்லை. இதை மனதில் கொண்டு தான் ஹஜ் மானியம் பற்றி விவாதிக்க வேண்டும்.

Salahuddin said...

//appeasement மற்றும் ஓட்டு வங்கியைக் குறிவைத்து ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு அரசுப் பணத்தில் மானியம் வழங்குவது என்பது என்பது ஒரு பாரபட்சமுள்ள அரசியல் நிலைப்பாட்டைக் குறிக்கிறது, வெறும் லாப, நஷ்டக் கணக்கை மாத்திரம் வைத்து இதை நியாயப் படுத்த முடியாது.//

யாத்ரீகர்கள் செலுத்திய பணத்திலிருந்தே ஒரு சிறு பகுதியை அவர்களிடம் திருப்பித் தந்து அதை மானியம் அன்று அறிவிப்பதே ஒரு மாபெரும் கண்துடைப்பு. இதில் 'அரசுப் பணம்' என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹஜ் கமிட்டி யாத்ரீகர்களிடம் பணம் பெறும்போதே இந்தத் தள்ளுபடி தொகையை கழித்து விட்டு பணம் பெற்றால் இந்தப் பிரச்னையே எழாது என்பதுதான் என் கருத்து.

மாசிலா said...

நான் முஸ்லீம் இல்லை. இருந்தாலும் என் கருத்து :
அரபு நாட்டில் உழைக்கும் இந்தியர்களின் மூலம் இந்தியாவுக்கு ஏகப்பட்ட பணம் நாட்டிற்கு அன்னிய செலாவணியாய் கிடைக்கிறது. எண்ணிலடங்காத இந்திய குடும்பங்கள் வாழ்கின்றன. இதை வைத்து பார்த்தால் இந்த உதவி ஒரு சிறு துரும்பே. மேலும் மதங்களுக்குள் மற்றும் அரபு நாட்டுடன் இது நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.
மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் மதிப்பும் உயரும்.

ஜயராமன் said...
This comment has been removed by a blog administrator.
வஜ்ரா said...

//
ஹஜ் கமிட்டி யாத்ரீகர்களிடம் பணம் பெறும்போதே இந்தத் தள்ளுபடி தொகையை கழித்து விட்டு பணம் பெற்றால் இந்தப் பிரச்னையே எழாது என்பதுதான் என் கருத்து.
//

சார்,

முதலில் அன்த தள்ளுபடி ஏன் ? செகுலர் இந்திய அரசாங்கம் இப்படி தள்ளுபடி செய்வது தவறு என்பது தான் வாதம்...

35000 ரூ விமான டிக்கெட் போக, நாடெங்கும் A/C ஹஜ் யார்ரிரை hallகள் கட்டியும், பிரயாண நாட்கள் அனைத்திலும் இலவச உணவும் கிடைக்கிறது...அரசுப் பணத்தில் தான்...அது ஒன்றும் ஏர் இந்தியாவுக்கு வரும் இலாப பணத்தின் சிறு பகுதியல்ல.

subsidy என்ற வார்த்தைக்கு நீங்கள், தள்ளுபடி என்றெல்லாம் வார்த்தைகள் போட்டுவிட்டால் அது மான்யம் இல்லாமல் மாறிவிடாது...! அப்படியே நீங்கள் சொல்லும் தள்ளுபடியாகவே இருக்கட்டும் அது...எத்தனை கும்ப மேளா ரயில்களில் தள்ளுபடி கொடுக்கிறார்கள்...?

அமர் நாத் யாத்திரைக்கு அத்தகய தள்ளுபடி இல்லையே...? ஏன்?

It is Muslim appeasement and nothing else.

வஜ்ரா said...

பத்துவா போடுவதாக இருந்தால்... ஒரு ஐடியா...


சிலைகளை வழிபடு கூட்டத்தின், சிலைகளுக்கு காணிக்கை பணத்தில் சிலைவழிபாடு தடை செய்யப்பட்ட இஸ்லாம் புனித யாத்திரையாம் ஹஜ் பயணத்திற்கு பணம் வழங்குவதும், வசதியில்லாதவர் போகத் தேவையில்லை என்று முகம்மது நபியே சொல்லியதாலும் இந்திய திம்மி அரசாங்கள் ஈமானுள்ள இஸ்லாமியருக்கு பிச்சை போட்டுக் கேவலப்படுத்த வேண்டியதில்லை...

அதுவும் காபிர்களின் கடவுள்களை வழிபட்டு காணிக்கையாக செலுத்திய பணத்தில் அந்த பிச்சை போடுவது தவறு...!!

திருப்பதியில் சிலைக்கு காணிக்கையாக செலுத்திய முடியில்தான் wig தயாரித்து விற்க்கப்படுகின்றது என்று தெரிந்ததும் ஈமானுள்ள யூதர்கள் அதை வாங்க மருத்துள்ளனர்...!! அதே போல் செய்யுங்களே பார்ப்போம்...!! எதற்கு வந்து பிச்சை எடுக்கின்றீர்கள்? புனித பூமியாம் சவூதியில் பணமா இல்லை...?

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா, ஜயராமன்,
Thanks.
மானியம் தருவதற்கு எதிராக உங்களிடம் பலமான கருத்துக்கள் இருக்கலாம். அதே நேரத்தில், விவாதத்தில் கடுமையை சற்று குறைத்தால், ஆரோக்கியமாக விவாதிக்கலாமே !

ENNAR, Calgary SIVA, G Raghavan,
Thanks for sharing your views !

Anony, Jatayu, mAsilA, Nambi, Dondu Sir,
Thanks for your comments.

நல்லடியார் said...

திரு.பாலா,

முதலில் உங்கள் பதிவு வழக்கம் போல் இஸ்லாமிய எதிர்ப்பு மடமோ என்று அஞ்சும் அளவுக்கு வார்த்தைகளடங்கிய பின்னூட்டங்கள். நன்றி.

//வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள்? இருந்தால்தானே கெடுவதற்கு?//

இது உண்மையான டோண்டுவின் பின்னூட்டம் தானா?

ஹஜ்ஜுக்காக கொடுத்த முன்பணத்தில் கிடைத்த இலாபத்தை திரும்பப் பெறுவதற்கு முஸ்லிம்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? ரிசிகேஷுக்கு கப்பம் வசூலிக்கும் சீனாவுடன் போரிட்டு ரிசிகேஷை மீட்க வெட்கக் கெட்ட பா.ஜ.க. அரசு தவறி விட்டதை நினைத்து வெட்கப் படுவோமாக!

வெட்கத்துடன்,
நல்லடியார்

கால்கரி சிவா said...

/நான் முஸ்லீம் இல்லை. இருந்தாலும் என் கருத்து :
அரபு நாட்டில் உழைக்கும் இந்தியர்களின் மூலம் இந்தியாவுக்கு ஏகப்பட்ட பணம் நாட்டிற்கு அன்னிய செலாவணியாய் கிடைக்கிறது. எண்ணிலடங்காத இந்திய குடும்பங்கள் வாழ்கின்றன. இதை வைத்து பார்த்தால் இந்த உதவி ஒரு சிறு துரும்பே. மேலும் மதங்களுக்குள் மற்றும் அரபு நாட்டுடன் இது நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.
மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் மதிப்பும் உயரும்.//

மாசிலா, அரபு நாட்டில் இரத்தம் சிந்தி உழைக்கும் நம் சகோதரர்களுக்கு மிக கம்மியான சம்பளமே தருகிறார்கள்.

நம் உழைப்பில்தான் அவர்களின் கூட கோபுரங்களும், மாடமாளிகைகளும், பளபளக்கும் கழிவிடங்களும் சாத்தியமாகின்றன.

உண்மையில் நம் இந்திய முஸ்லிம் சகோதரர்களின் மேல் அக்கரை இருந்தால் இந்த அரபு நாடுகள்தான் இந்திய முஸ்லிம் ஏழை சகோதரர்களை ஹஜ் யாத்திரைக்கு இலவசமாக அழைத்து செல்லவேண்டும்.

இதில் இந்தியா நன்றி காட்ட அவசியமில்லை அரபு நாடுகள் தான் இந்தியாவிற்கு நன்றி காட்டவேண்டும்

Salahuddin said...

திரு. பாலா,

//இசுலாமியச் சகோ யாராவது வந்து இதை தெளிவுபடுத்தினால் நல்லது.// என்று நீங்கள் வைத்த வேண்டுகோளுக்காகவே மானியம் தொடர்பான எனது கருத்துக்களை பின்னூட்டமிட்டேன். அதற்கு வந்த எதிர்வினைகள், குறிப்பாக ஜயராமன், டோண்டு ராகவன் ஆகியோரின் பின்னூட்டங்கள் நாகரீக எல்லையை கடந்து சென்றிருப்பதும் அவற்றை நீங்கள் எடிட் செய்யாமல் அனுமதித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மெத்தப் படித்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் உள்மனதில் இவ்வளவு வக்கிரங்களா? சக வலைப்பதிவர்களுடன் நாகரீகமான முறையில் உரையாட இவர்களை எது தடுக்கிறது?

பெரியவர் டோண்டு ராகவன் ஒருமுறை உடல் நலம் இன்றி இருந்தபோது, 'அவரை நலம் விசாரித்தால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்' என்பதை நன்கு தெரிந்தே courtesy-க்காக அவரது பதிவு ஒன்றில் அவரை நலம் விசாரித்து பின்னூட்டம் இட்டு, பின் அசிங்கமான வசைவார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்டவன் நான். இன்று டோண்டு சார் சொல்கிறார், முஸ்லிம்கள் வெட்கமே இல்லாதவர்கள் என்று! நல்லது ஐயா!

மற்றபடி, இதே விவாதம் வேறு யாருடைய பதிவுகளிலாவது நாகரீகமான முறையில் நடந்தால் இங்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்க முயல்வேன்.

enRenRum-anbudan.BALA said...

Jayaraman's comment has been currently removed as it has some objectionable words. It will be edited and published again later.

Unknown said...

//ரிசிகேஷுக்கு கப்பம் வசூலிக்கும் சீனாவுடன் போரிட்டு ரிசிகேஷை மீட்க //
நல்லடியார்,
ரிகேஷுக்கு கப்பமா?..சீனாவா...என்ன குழப்பம்? கொஞ்சம் தெளிவாகச் சொல்லவும்.

மதப் பிரச்சனையாக இல்லாமல் எல்லைப் பிரச்சனையாக பார்த்து கேட்கிறேன். ரிஷிகேஷ் முழுக்க முழுக்க இந்தியப் பகுதி எந்தவிதமான வில்லங்கமும் இல்லை இதில். கொட்டாம்பட்டியும் கொண்டையம்பட்டியும் போல இதி ஒரு வில்லங்கம் அற்ற நிலம்.

என்ன புதுக் குழப்பம் ?

enRenRum-anbudan.BALA said...

ஜயராமன் said...

பதிவை பார்த்து ஆச்சரியம். வழக்கம்போல, ................... சப்பைகட்டுகளும் நகைச்சுவையானவை. இதுதான் ஜல்லி என்கிறதா? என்னவோ இணைய தமிழ் கஷ்டப்படுத்துகிறது.

இந்த வழக்கு போட்டு 15 வருஷமாகிறது. அரசாங்கம் இதில் சரியான பதிலும் சொல்லவில்லை. இதை வேண்டும் என்றே இழுத்தடிக்கிறது. இப்படி ஜல்லி அடிக்கும் ............... ஏன் தங்கள் ஹஜ் கமிட்டியின் மூலமாக தங்கள் விவாதத்தை கோர்ட்டிடம் சொல்லக்கூடாது. அங்கு பருப்பு வேகாது என்று தெரியும்.

சர்க்காரும் கூசாமல் பொய் சொன்னது. அதை கோர்ட் அம்பலப்படுத்தியதும் வாயடைத்து நிற்கிரார்கள் சர்க்கார் ஜல்லிகள். மானஸரோவருக்கு மானியம் இல்லை. அதாவது, ரோடு போடும் செலவு,பாதுகாப்பு என்பதையெல்லாம் மானியமாக சொல்லப்பட்டது. கோர்ட் படி இது சர்க்காரின் கடமை.

சபரிமலையிலிருந்து வைஷ்ணவி வரை எத்தனை கோடி இந்துக்களிடமிருந்து சுரண்டி ஆகிறது.

பாகிஸ்தானில் ஒரு கோர்ட் 1997 ல் (நீதிபதி தன்வீர் அகமத் லாகூர் கோர்ட்) தீர்ப்பின் படி அரசு மானியம் வாங்கி ஹஜ் போவது ஷரீய்யாவிற்கு விரோதம்.

அப்படி இருந்தால் இதுவரை ஏன் ...................இதற்கு ஃபட்வா வழங்கவில்லை. ஓசியில் கிடைத்தால் ஷரீய்யா வேலை செய்யாது போலும்!!

...............யாரும் இந்த மானியம் கேட்கவில்லையாம். அரசாங்கமே வழங்குகிறதாம். இப்படி ஒரு கும்பல் ஜல்லி அடிக்கிறது.

ஆனால், நடப்பது என்ன? இந்த கோர்ட் விசாரணை நடந்தவுடனே, ஒரு ........ கோஷ்டி காஷ்மீரிடமிருந்து வந்து சோனியாவை பார்த்து ஹஜ் மானியத்தை கூட்ட சொல்லி கேட்டிருக்கிறார்கள். சோனியாவும் "பரிவோடு பார்ப்பதாக" வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ...............................ஏன் இந்த இரட்டை வேஷம்?

பாகிஸ்தான், சவுதி முதலிய நாடுகளே இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்று சொல்லி வழங்குவதில்லை.

இந்துக்களின் கோயிலிருந்து எடுத்த உண்டியல் பணத்தில் மதராஸாக்களும், உருது மொழி வளர்ச்சி என்று ....................................... இந்த பணத்தை அனுபவித்து வந்தது கர்னாடகா கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளானது, சமீபத்தில். முஸ்லிம் ஒருத்தரும் வாயை திறக்க காணோம்.

வந்தே மாதரம் பாடினால் அல்லா கோபிச்சுப்பார் என்று சொல்லும் ................. இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்றால் ஏன் ........................வாங்கிக்கொள்ளுகிறார்கள்.

இது மானியம் இல்லை. லாபத்தில் பங்கு என்றெல்லாம் ஜல்லி அடிக்க வேண்டாம். இது மானியம் தான் என்று பல முஸ்லிம் லீடர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் ஜல்லி என்ன தெரியுமா "நாங்களா கேட்டோம், அதுவாக கிடைக்கிறது"

................ edited ..................

நன்றி

6:00 PM, September 25, 2006

enRenRum-anbudan.BALA said...

One of Dondu Sir's comments has been removed by me to avoid unnecessary controversy. Also, it had nothing relevant to the posting.

said...

துலுக்கன் என்று ஜெயராமன் எழுதியதற்கு இந்த குதி குதிக்கும் நல்லடியார்&கோ பார்ப்பான் என்று எத்தனை ஆயிரம் முறை எழுதியிருப்பார்கள்?அப்போது பார்ப்பனர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?அவ்வளவு ஏன்?ஒட்டுமொத்த இந்துக்களையும் திம்மிக்கள் என்றாரே அப்போது அது தேன் போல் இனித்ததாக்கும்?

டோண்டுவை இறைநேசன் எத்தனை மோசமாக தாக்கினார்?அப்போது எல்லாம் அவருக்கு எப்படி வலித்திருக்கும்?

பாப்பான் என எழுதினால் அதை எடிட் செய்யாமல் வெளியிடுவீர்கள்.துலுக்கன் என எழுதினால் எடிட் செய்வீர்கள்.பாலா,உங்கள் நடுநிலைமை அதிர்ச்சி அளிக்கிறது.

'திக்கை வணங்கும் துலுக்கர்' என பாரதி எழுதினாரே?அதை கூட எடிட் செய்து தான் பிரசுரிப்பீரோ?

ஜயராமன் said...

Bala sir,

I object to you sensoring my comments. If you find my comments objectionable, the only option for you is to deny publishing it.

thanks

Jayaraman

ஜயராமன் said...

Bala sir,

I request you to remove my comment which has been censored by you.

thanks

Jayaraman

said...

A secular government cannot give any subsidy to any citizen to fulfill his/her religious duties.
So the court's verdict is right.
The Supreme Court also has raised
the same question i.e. how can
a secular government give subsidy
to persons from a religion when
such subsidies are not available
to citizens of other religions.
The comments from muslims to
this post do not address this
basic question.When governments
that claim to follow islam do
not give such subsidies how can
muslims in india expect such a
subsidy from a secular government.
Their attitude is like this -
let us enjoy it as long as we
get it, however illegal it may.
These muslims will object to
singing Vande Mataram but will
not object to Haj subsidy.

said...

உண்மையில் நம் இந்திய முஸ்லிம் சகோதரர்களின் மேல் அக்கரை இருந்தால் இந்த அரபு நாடுகள்தான் இந்திய முஸ்லிம் ஏழை சகோதரர்களை ஹஜ் யாத்திரைக்கு இலவசமாக அழைத்து செல்லவேண்டும்.

இதில் இந்தியா நன்றி காட்ட அவசியமில்லை அரபு நாடுகள் தான் இந்தியாவிற்கு நன்றி காட்டவேண்டும்

Are they not showing 'gratitude'
by funding Pakistan's nuclear
program and by supporting Pakistan
in Kashmir issue.Are they not 'helping' India by refusing
to accept Kashmir as part of
India.The Organisation of Islamic
Countries (OIC) is pro-pakistani, not even neutral in this issue.
The 'patriotic' muslim bloggers
will not write anything condemning
OIC in this issue.

enRenRum-anbudan.BALA said...

I will respond to the issues raised here, after sometime.

வஜ்ரா said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

ஜயராமன்,
ஒரு விவாதத்தில் கேள்விகள் கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது தான். அதே நேரத்தில், விவாதம் திசை திரும்பாமல் இருக்க, சிலவற்றை எடிட் செய்ய வேண்டி உள்ளது. அது, உங்களை அவமானப்படுத்துவது ஆகாது. அது என் நோக்கமும் இல்லை. உங்கள் பின்னூட்டத்தில், பிறர் படிக்க சில செய்திகள் இருப்பதால், அதை முழுதும் நீக்கவில்லை. சென்சார் செய்வதற்கு எனக்குத் தகுதி / உரிமை உண்டா என்பதற்குள் செல்ல வேண்டாமே ! நன்றி.

கல்வெட்டு, நல்லடியார், சலாவுதின், கால்கரி சிவா, இங்கிலிஷ் அனானி(!),

நன்றி.

"தமிழ்" அனானி,

//பாப்பான் என எழுதினால் அதை எடிட் செய்யாமல் வெளியிடுவீர்கள்.துலுக்கன் என எழுதினால் எடிட் செய்வீர்கள்.பாலா,உங்கள் நடுநிலைமை அதிர்ச்சி அளிக்கிறது.
//
ஒரு வார்த்தை objectionable ஆவது, context-ஐயும் பொருத்தது. "பாப்பான்" என்ற வார்த்தையையும் பல முறை (சில தடவை தவறியும் இருக்கலாம்) எடிட் செய்திருக்கிறேன். அதனால், மைனாரிட்டி அப்பீஸ்மெண்ட் என்று எதுவும் கிடையாது.

//துலுக்கன் என்று ஜெயராமன் எழுதியதற்கு இந்த குதி குதிக்கும் நல்லடியார்&கோ பார்ப்பான் என்று எத்தனை ஆயிரம் முறை எழுதியிருப்பார்கள்?அப்போது பார்ப்பனர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?அவ்வளவு ஏன்?ஒட்டுமொத்த இந்துக்களையும் திம்மிக்கள் என்றாரே அப்போது அது தேன் போல் இனித்ததாக்கும்?

டோண்டுவை இறைநேசன் எத்தனை மோசமாக தாக்கினார்?அப்போது எல்லாம் அவருக்கு எப்படி வலித்திருக்கும்?

//
பிறர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது என் பிரச்சினையல்ல. தவறு என்று பட்டால், நான் திருத்திக் கொள்ள முயல்கிறேன், அவ்வளவே. பதிவின் நோக்கம் ஹஜ் மானியம் குறித்த விவாதமேயன்றி, தனிமனித தகராறுகளை ஊக்குவிப்பதற்கு அல்ல. நன்றி.

வஜ்ரா,
உங்கள் பின்னூட்டத்தை நீக்க வேண்டிய சூழ்நிலை, மன்னிக்கவும் !

enRenRum-anbudan.BALA said...

test !!!

said...

டோண்டு ராகவின் மனைவியின் பெயரில் இடப்படும் போலிப் பின்னூட்டங்களை அனுமதிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: உங்கள் மனைவி(கள்) பெயரிலும் இது
போல் வலைப்பதிவு தொடங்கி உங்களுக்கு எதிரான/பிடிக்காத கருத்துக்களை
இட யாராலும் முடியும். எனவே முதலில் இந்தப் போலிகளின் பின்னூட்டங்களை
பிரசுரிப்பதை தவிர்க்கவும்.

வஜ்ரா said...

//
வஜ்ரா,
உங்கள் பின்னூட்டத்தை நீக்க வேண்டிய சூழ்நிலை, மன்னிக்கவும் !
//

இது உங்கள் வலைப்பூ,

இதில் என்ன வெளியிடவேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறவர்கள் நீங்கள்...என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டாம்..

டோண்டு கமெண்டும், என் கமெண்டும் போக, அப்பழுக்கற்ற தனி நபர் தாக்குதல் கொண்ட சுல்தான் கமெண்ட் மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்? அதை குறைந்தபட்சம் எடிட் ஆவது செய்யுங்கள்...!!

ரவுடிப்பய பொஞ்சாதியை சைட் அடிக்கிறான் என்பதற்காக ரவுடியை தாக்குவதை விடுத்து பொஞ்சாதியின் மாராப்பு சரிந்துவிட்டது என்று பொஞ்சாதியை திட்டும் வீர ஆண்மகன்கள் போல் behave செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது...!!

enRenRum-anbudan.BALA said...

Anony, Vajra,

nanRi !

enRenRum-anbudan.BALA said...

Mr.Sultan's comment has been edited and published below
****************************

சுல்தான் said...
நல்ல விளக்கத்திற்காக நல்லடியாருக்கும் சலாஹுத்தீனுக்கும் நன்றி.

நல்லடியாரும் சலாஹுத்தீனும் விளக்கமளித்த பின் விளங்குபவர்களுக்கு விளங்கி விட்டது.

மற்றவர்களுக்கு விளங்கினால் யாருக்கு பின்னால் மிளகாய் வைத்தது போல் எரிகிறதோ அவர்கள் மட்டும் இப்போது.... என்னென்னவோ.... பாவம். கத்திவிட்டுப் போகட்டும்.

எங்கள் பணத்தை கூடுதலாக எங்களிடம் வாங்கிவிட்டு திருப்பித் தருகிறார்கள். எந்த விமானத்திலும் பணயம் செய்யலாம் என்று அறிவித்து விட்டு இதை நிறுத்தி விடலாம் என்று நாங்களே ஒப்புக் கொள்கிறோம். முயற்சி செய்து பாருங்களேன்.

subsidy அல்லது மானியம் என்ற பெயரில் தரப்படுவது உண்மையில் subsidy இல்லை. ஏர்லைனினன் வியாபாரத்தந்திரம். புரிந்து கொள்ள அறிவிருந்தால் புரிந்து கொள்ளட்டும் ;;;;;;;;;;;;;; Edited ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உரிமையைப் பெறுவது ஷரீயத்துக்கு விரோதமில்லை டோண்டு. ;;;;;;;;;;;;;;;;;;;;;;;Edited ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
12:18 AM, September 26, 2006
*****************************

நல்லடியார் said...

////ரிசிகேஷுக்கு கப்பம் வசூலிக்கும் சீனாவுடன் போரிட்டு ரிசிகேஷை மீட்க //நல்லடியார்,ரிகேஷுக்கு கப்பமா?..சீனாவா...என்ன குழப்பம்? கொஞ்சம் தெளிவாகச் சொல்லவும்.//

கல்வெட்டு,

ரிஷிகேஷ் என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். கைலாஷ் மானஸரோவர் என்று வாசிக்கவும்.

மற்றபடி, இந்திய முஸ்லிம்களை துலுக்கர்/துலுக்கன் என்பது அறியாமையே; அவ்வாறு குறிப்பிட்டாலும் எனக்கு வருத்தமில்லை என்பதை மாற்றுமத நண்பர்கள் உணரவும்.

பிராமனர்களை பார்ப்பனர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்? கோனார் தமிழ் அகராதியில் அவ்வாறே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள் ஏதேனும் கேட்க விரும்பினால் என் பதிவில் கேட்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது பதில் கொடுக்கிறேன்.

பாலா,
உங்களின் விளக்கத்தை என் பதிவில் பிரசுரித்துள்ளேன். புரிந்து கொள்ளலுக்கு நன்றி.

அன்புடன்,

சும்மா அதிருதுல said...

நீங்கள் நல்ல நோக்கத்துடன் பதில் எதிர்பாக்கிறீகள் என்று பின்னுட்டம் இட்டேன்.

இங்கு நடந்த சம்பவத்திற்க்கு பிறகு எனது பின்னுட்டத்தை நீக்கிவிட்டேன்.

எனது பதிலை தனிமெயிலாக அனுப்பியிருந்தேன் கிடைத்ததா..?

நன்றி

said...

Nalladiyar and Irai Nesan have posted their views in their respective blogs.It shows that
they are not only anti-brahmins
but are also incpable of responding
decently to views of others, however provocative they are.
They can disagree with Dondu,Jayaraman,Vajra etc but
cant they express that decently.
Nalladiar has even permitted
comments of a blogger who has
created a blogid in the name
of radha raghavan.Nalladiyar
relishes such comments.
Balaji should be careful with
such bloggers in future.

enRenRum-anbudan.BALA said...

நல்லடியார்.
nanRi !
//பிராமனர்களை பார்ப்பனர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்? கோனார் தமிழ் அகராதியில் அவ்வாறே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
//
You are correct but here some bloggers use it in a derogatory manner as "பாப்பான் " to abuse others.

//எனது பதிலை தனிமெயிலாக அனுப்பியிருந்தேன் கிடைத்ததா..?
//
I have replied to your mail. Pl. check !

Unknown said...

//ரிஷிகேஷ் என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். கைலாஷ் மானஸரோவர் என்று வாசிக்கவும்.//

நன்றி நல்லடியார்!
குழப்பம் தீர்ந்தது :-)

ஜயராமன் said...

பார்ப்பான், துலுக்கன் இரண்டுமே ஒரு social identity. ஒன்று இனத்தை குறிக்கிறது, மற்றது சாதியை குறிக்கிறது.

சாதியை குறிக்கும் எந்த Identityஐயும் நிராகரிக்க வேண்டும் என்பது எல்லா முற்போக்கு சிந்தனையுள்ளவர்களின் கருத்து. அதனால், பார்ப்பான் என்பது தவிர்க்கப்பட்டது. அவ்வாறே மற்ற சாதி இனப்பெயர்களும்.

மாறாக, துலுக்கன் என்பது சரியான தமிழ் பெயர். அது மதம் சார்ந்த சமுதாயத்தின் அடையாளம். அந்த சமூகம் இந்த மதம் சார்ந்த அடையாளத்துக்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் இந்த வார்த்தையை தவிர்க்கலாம். அவ்வாறு தெரியவில்லை. அதனால், துலுக்கன் என்பது சரியான வார்த்தை. மாறாக முஸ்லிம், இஸ்லாமியர் என்பதெல்லாம் பிறமொழி சார்ந்த வார்த்தைகள்.

இரண்டு வார்த்தைகளுமே, நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை. ஒரே வித்தியாசம் - சாதி அடையாளங்களை குறிக்கும் சொற்களை தவிர்க்க முயல வேண்டும்.

துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே. ஆனால், அதற்காக அந்த தூய தமிழ்வார்த்தையில் ஏதும் குறை இல்லை.

நன்றி

said...

//பிராமனர்களை பார்ப்பனர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்? கோனார் தமிழ் அகராதியில் அவ்வாறே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.//

முஸ்லிம்களை துலுக்கர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்?பாரதியார் பாடலில் "திக்கை வணங்கும் துருக்கர்" என்று தான் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

வஜ்ரா said...

//
//பிராமனர்களை பார்ப்பனர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்? கோனார் தமிழ் அகராதியில் அவ்வாறே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.//

முஸ்லிம்களை துலுக்கர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்?பாரதியார் பாடலில் "திக்கை வணங்கும் துருக்கர்" என்று தான் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
//

எண்ணெய் என்பதற்கு உண்மையான பொருள்..எள் + நெய் அதாவது எள்ளிலிருந்து எடுத்த நெய்.

இன்றய அர்த்தம் எண்ணெய் என்பது ஒரு பொதுப்பெயர் அதனைவத்து, நல்லெண்ணெய், ரீபைண்ட் எண்ணெய் என்று மாறிவிட்டது...

அதே போல் தான் பார்ப்பானர் என்றால் பழயகாலத்தில் ஒரு அர்த்தம் இருந்தது...இன்று அது ஒரு derogatory racist வார்த்தையாக மாறிவிட்டது...துலுக்கன் என்பதும் அப்படியே...

துலுக்கன் என்பதை எதிர்ப்பவர்கள் பார்ப்பானர் என்று பயன் படுத்தக்கூடாது, பார்ப்பானர் என்பதை எதிர்ப்பவர்கள் துலுக்கர் என்று சொல்லக் கூடாது.. அதுவே சரியாக இருக்கும்...

பிரச்சனை பார்ப்பானரா, துலுக்கனா என்று இல்லை. இஸ்லாமியருக்கு வழங்கப்படும் இந்த மானியம் ஒரு "செகுலர்" அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறதா என்பது தான்.

பலர், அது மானியமே அல்ல என்கின்றனர்...

சிலர், நான் உட்பட அது மானியமே, அது வழங்குவது தவறு என்கின்றோம்...உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே அதைத்தான் கூறுகின்றது.

இனி ஏதேனும் Healthy discussion நடக்கவேண்டும் என்று மதிப்பிற்குறிய பாலா எண்ணினால்,

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, உயர் நீதிமன்ற தீர்ப்பு இரண்டையும் வைத்து தான் நடக்க வேண்டும்...

அது மானியமே அல்ல என்று புருடா விடுவதை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ள எந்த அவசியமும் இல்லை.

Unknown said...

//Mr.Sultan's comment has been edited and published//

அழுக்காக எழுதுபவர்களுக்கு அழுக்கு நடையிலேயே பதிலளித்தால்தான் வலிக்கும் என்பதால்தான் அவ்வாறு எழுத நேர்ந்தது.

நானே சொல்லலாமென நினைத்தேன். ஏனெனில் நான் தான் அழுகல் நடையை ஆரம்பித்ததாக மற்றவர் எண்ணக்கூடும்.

நன்றி வஜ்ரா - கேட்டுக்கொண்டதற்காக,

நன்றி பாலாஜி - எடிட் செய்து வெளியிட்டதற்காக.

said...

//பிராமனர்களை பார்ப்பனர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்? கோனார் தமிழ் அகராதியில் அவ்வாறே அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.//

முஸ்லிம்களை துலுக்கர் என்று சொன்னால் ஏன் வலிக்க வேண்டும்?பாரதியார் பாடலில் "திக்கை வணங்கும் துருக்கர்" என்று தான் அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.//

தலைப்பை விட்டு பிறழாத வகையில் அழகாக விவாதத்தை கொண்டு செல்கிறீர்கள். நடத்துங்க பாலா.

said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

PULIPAANDI's comment is edited and published !

//ரவுடிப்பய பொஞ்சாதியை சைட் அடிக்கிறான் என்பதற்காக... //ரவுடிப்பய பொஞ்சாதியை சைட் அடிக்கிறான் என்பதற்காக ரவுடியை தாக்குவதை விடுத்து பொஞ்சாதியின் மாராப்பு சரிந்துவிட்டது என்று பொஞ்சாதியை திட்டும் வீர ஆண்மகன்கள் போல் behave செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது...!!//

பாலா அண்ணா இதுக்கு நா சங்கரண்ணாவுக்கு ஏற்கெனவே மணியண்ணன் பதிவுல பதில் கொடுத்துட்டேன்.

வேணுமின்னா அத இங்கயும் வக்கிறேன். அவரு இதுவர அதுக்கு பதில் சொல்லல. இங்கயாவது சொல்லாரான்னு பாப்போம்.

****************************
****************************
//ரௌடிப்பய தம் பொண்டாட்டிய தப்பா பார்க்கிறான் என்றால் ரௌடியின் கண்ணில் தவறு என்று சொல்லாமல் மனைவியின் மாராப்பு சரிந்ததனால் தான் அவன் பார்த்தான் என்று சொல்லும் மூடர்களிடம் என்ன பேச்சு...!//

சங்கரண்ணா இது சரியான்னு ஒரு மொறக் கூட நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதில பாத்துட்டு பதில் சொல்லுங்க.

ஒருத்தன் ரவுடி/கேடீன்னு தெரிஞ்ச பின்னாடி அவன் முன்ன போயி முந்தானய தொங்க வுடூது சரியாண்ணா?

ஆமா இதுக்கு நீங்க எங்க பதிலு சொல்ல போறீங்க. நீங்க தான் "காம"கேடிப்பயல தெய்வீகபுருசர் சாய்பாபா ரேஞ்சுக்கு ஒயத்தியவராச்சே.

//சங்கராச்சார்யாரோ, சாயிபாபா வோ பத்துவா போட்டாங்களா?//

ஆமா நா மொதல்ல வச்ச கோரிக்கய நீங்க ஏன் இன்னும் கண்டுக்கல?
************* Edited by administrator *****************
(pulipaandi) 4:32 PM

வஜ்ரா said...

பாலா,

மறுமொழியில் edit செய்ய இந்த லிங் பயன்படுத்துங்கள்...

புலிப்பாண்டி,

கேள்வி கேட்டுகினே இரு...ரவுடிக்கு பயந்து பொஞ்சாதியை வீட்டுல பூட்ற ஆள்தானெ நீ...! பயந்து பழகிக்கொன்னு சொல்ற மாதிரி இருக்கு உன் கேள்வி..புலின்னு பேருவச்சிகினு எலி மாதிரி யோசிக்கிற...

யாரு போயி ரவுடி முன்னாடி அவுத்துபோட்டு ஆடுறா..? ரவுடி வூட்டு சொத்துல பங்கு கேக்குறான்...வந்து...எடுத்து கொடு...

enRenRum-anbudan.BALA said...

//பாலா,

மறுமொழியில் edit செய்ய இந்த லிங் பயன்படுத்துங்கள்...
//
Thanks, Vajra for showing the Link.

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பாலா,

சிங்கையில் சுற்றிக்கொண்டிருப்பதால் சரியாக வலைப்பூக்களைப் பார்க்கவில்லை. நல்ல பதிவு நல்ல கேள்விகள்.

இது போன்ற விவாதங்கள் சில நேரங்களில் திசை திரும்பத்தான் செய்யும்...சல்தா ஹை.

நண்பர் சலாஹுத்தீன் எழுதிய விளக்கங்களே எனது கருத்தாகவும் இருக்கிறது.

ஒரே வரியில் எனது பார்வையைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றால், *ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம் தருவதை ஆதரிக்கவேண்டிய அவசியம் கிடையாது*

இது மானியமோ, தள்ளுபடியோ, சார்ட்டட் விமானம் எடுத்தால் எத்தனை குறைவாகுமோ...இத்தியாதி இத்தியாதிகளெல்லாம் அவரவர் பார்வைப்படி அவரவர்க்கான கோணங்கள், எண்ணங்கள். அவற்றில் நாம் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது.

ஹஜ்ஜிற்காக அரசு தரப்பிலிருந்து மானியம் தேவையில்லை - இது எனது கருத்து.

அடுத்த வாரத்தில் சென்னை திரும்பியதும் விவரமாக எழுதுகின்றேன்.

அன்புடன்
ஆசாத்

நல்லடியார் said...

பாலா, உங்களுக்கு என் பதிவில் பதிலிட்ட என் பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.(பிரசுரிப்பதும்/எடுட் செய்வது உங்கள் உரிமை)

அன்புடன்,
நல்லடியார்

//nalladiyAr,You accused me of allowing some objectionable comments and now in this posting, you are allowing all sorts of RUBBISH to be published.Sorry to tell you, I am terribly disappointed by your approach.
Thanks.//

பாலா,
உங்கள் பதிவின் நோக்கமும் ஒரு தேசிய விவாதப்பொருளாக இருந்ததாலும், முஸ்லிம்கள் ஏன் விளக்கவில்லை என்று கேட்டிருந்ததாலும் எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். அதிலுள்ள நியாயமானவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தீர்கள்.நிற்க,

1) பத்துவா போடுவதாக இருந்தால்... ஒரு ஐடியா...- வஜ்ரா

2) அப்படி இருந்தால் இதுவரை ஏன் ...................இதற்கு ஃபட்வா வழங்கவில்லை. ஓசியில் கிடைத்தால் ஷரீய்யா வேலை செய்யாது போலும்!! - ஜெயராமன்

3) Their attitude is like this -
let us enjoy it as long as we
get it, however illegal it may.
These muslims will object to
singing Vande Mataram but will
not object to Haj subsidy.
- அனானி

4) துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே - ஜெயராமன்

5) Do you expect Nalladiyars and Irai Nesans to understand the decisions of the courts and argue on that basis.That is too much.They may be thinking that Saudi Arabia is a secular country while India is
not :) அனானி # 2

இவையெல்லாம் நீங்கள் அநாகரிமாக கருதி எடிட் செய்ததோடு தனிமனித தாக்குதலை எதிர்ப்பதாக சொன்ன பிறகும் வெளியான Unedited Comments.

உங்களின் Disappointment இல் இன்னும் நியாயம் இருப்பதாகச் நம்புகிறீர்களா?

Ratharagavan என்ற பெயரில் வெளியான பின்னூட்டங்களில் முதலில் உள்ளதை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்பதோடு நீக்கியும் விடுகிறேன். அதே பெயரில் வெளியான பிந்தைய பின்னூட்டங்கள் திருவாளர் டோண்டு ராகவன் பெருமையாக தன் பதிவில் சொல்லி இன்றும் அதை நியாயப்படுத்தி வருபவைதான். இதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் இன்றும் மதித்து வரும் ஆசிரியர்கள் முதல் பணியிடத்திலும் தமிழ் பார்ப்பன/ப்ராமன நண்பர்கள் இருக்கிறார்கள். திருவாளர் டோண்டு அவர்களைக் கூட என் கல்லூரி சீனியர் என்றே மதித்தும் அவ்வப்போது பின்னூட்டமிட்டு (தட்டியும்/குட்டியும்) வந்திருக்கிறேன். அதையெல்லாம் நினைவில் கொள்ளாது, முஸ்லிமகளி மானங்கெட்டவர்கள் என்று சொன்னது மனதை புண்படுத்தியது. இதை எழுதியது உண்மையான டோண்டு ராகவன் தானா என்று உங்கள் பதிவில் கேட்டிருந்தும், அவரிடமிருந்து பதிலில்லை. இப்படி மனதில் குரோதத்தை தேக்கி வைத்து இனிமையாகப் பழகுபவர்களை என்னவென்று சொல்வது? அந்த ஆதங்கத்தில்தான் வழக்கத்திற்கு மாறாக என் பதிவில் கடுமையான வார்த்தை பிரயோகம். மற்றபடி நான் எங்கும் எவரையும் அநாகரிமாக விமர்சித்ததில்லை.

ஒருமுறை உரு மொழி பற்றிய டோண்டுவின் பதிவில் முதல் ஆளாக பின்னூட்டியதால் எனக்கு போலி டோண்டு அநாகரிகப்பின்னூட்ட எச்சரிக்கை விடுத்திருந்தார். (போலி டோண்டுவின் அநாகரிகம் தலை விரித்து ஆடிய நேரம் அது) அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதன்பின்பும் திருவாளர் டோண்டுவின் பதிவில் பின்னூட்டி வந்திருக்கிறேன்.

இணையத்தில் எங்கோ ஒரு மூளையில் உட்கார்ந்து கொண்டு தமிழில் கருத்துப் பரிமாறிக் கொள்ள கிடைத்த வாய்ப்பை, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றும் களமாகப் பயன்படுத்திவர்களையும் நீங்கள் அறிவீர்கள். அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்களையொ அல்லது வேதங்களையோ அநாகரிகமாக விமர்சித்து எழுதியதைக் காட்ட முடியுமா? இதுதான் நண்பரே இஸ்லாம் காட்டிய வழிகாட்டல். இதனை உணராது மீண்டும் மீண்டும் மதநம்பிக்கைகளை விமர்சித்து எழுதுவரகள் இருக்கும்வரை என்போன்ற சாதாரன முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்க்க முடியாதது. மற்றபடி யார் மீதும் எனக்கு கோபமோ குரோதமோ இல்லை.

உங்கள் பதிவைப் பார்க்கும் வரை ரமலான் மாதத்தில் இஸ்லாம் பற்றி மட்டுமே எழுத இருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக இப்பதிவுக்கு உங்களின் அனுமதிக்கப்பட்ட பின்னூட்டங்கள் காரணமாகி விட்டது.
# posted by நல்லடியார் : 9/28/2006 12:14 AM

enRenRum-anbudan.BALA said...

nalladiyAr,
I will respond to your comment later.
thanks !

Azad,
nanRi ! Pl. send me a mail. Enjoy Singapore :)

enRenRum-anbudan.BALA said...

TEST 78 !

enRenRum-anbudan.BALA said...

நல்லடியார்,
//
உங்களின் Disappointment இல் இன்னும் நியாயம் இருப்பதாகச் நம்புகிறீர்களா?
//
உங்கள் பதிவில் நான் கூறியதற்கான விளக்கம்:

டோண்டுவின் கருத்துக்களை (காட்டமாகவே, தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடாமல்,) எதிர்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதே நேரத்தில், அவரது மனைவி பெயரில் வந்து ஒருவர்
பின்னூட்டமிடுவதை அனுமதிப்பது, சூழலுக்கு பெருங்கேடான ஒன்று. அவர் கூறிய கற்பு பற்றிய கருத்துக்களுக்காக, அவர்
குடும்பத்தை எதற்கு இழுக்க வேண்டும் ?????? இறைநேசன் பதிவையும் பாருங்கள்.

என் விளக்கங்களை கிழே தந்திருக்கிறேன். ஆபாசம், வக்ரம் என்பவற்றை வரையறுப்பது, context சம்பந்தப்பட்டது, மாறுதலுக்கும்
உரியது. என்னளவில், பின்னூட்டங்களை எடிட் செய்திருக்கிறேன், நீக்கியிருக்கிறேன். இன்னும் பல பின்னூட்டங்களை
வெளியடவே இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் !

//1) பத்துவா போடுவதாக இருந்தால்... ஒரு ஐடியா...- வஜ்ரா
//
வஜ்ரா சற்று காட்டமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அவரது வாதத்தின்படி, அரசு
மான்யம் வழங்குவதும், அதை இசுலாமியர் ஏற்றுக் கொள்வதும் தவறு என்பதாகும். வசதியில்லாதவர் ஹஜ் மேற்கொள்ள வேண்டிய
கட்டாயம் இல்லாதபோது, அரசு மானியம் என்று வழங்குவதை (அதாவது, அப்படி கூறப்படுவதை) வேண்டாம் என்று விலக்குதல்
வேண்டும் என்கிறார்.

//2) அப்படி இருந்தால் இதுவரை ஏன் ...................இதற்கு ஃபட்வா வழங்கவில்லை. ஓசியில் கிடைத்தால் ஷரீய்யா வேலை செய்யாது
போலும்!! - ஜெயராமன்
//
ஜயராமனின் முக்கிய கேள்விகளான
"பாகிஸ்தானில் ஒரு கோர்ட் 1997 ல் (நீதிபதி தன்வீர் அகமத் லாகூர் கோர்ட்) தீர்ப்பின் படி அரசு மானியம் வாங்கி ஹஜ் போவது
ஷரீய்யாவிற்கு விரோதம். "
"பாகிஸ்தான், சவுதி முதலிய நாடுகளே இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்று சொல்லி வழங்குவதில்லை."
போன்றவைக்கு பதில்கள் வராமல், விவாதம் திசை மாறி விட்டது துரதிருஷ்டமே !

மானிமாகச் சொலவது ஓசியில்லை என்று
நீங்களும், சலாவுதினும் விளக்கினீர்கள். ஷரீயத் என்ன சொல்கிறது ?

//3) Their attitude is like this -let us enjoy it as long as we get it, however illegal it may.
These muslims will object to
singing Vande Mataram but willnot object to Haj subsidy.
- அனானி
//
அனானி ஒன்றை முரணாகக் குறிப்பிடுகிறார். இதற்கு யாராவது விளக்கம் தந்திருந்தால், அதையும் பிரசுரித்திருப்பேன்.

//4) துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே - ஜெயராமன்
//
அப்படி இல்லை என்று நீங்கள் விளக்கியிருக்கலாமே !

5) அனானி # 2 வின் பின்னூட்டத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதை தனிமனித தாக்குதல் என்று நீங்கள் கருதுவதால், நீக்கி விடுகிறேன்.

//அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்களையொ அல்லது வேதங்களையோ அநாகரிகமாக விமர்சித்து எழுதியதைக்
காட்ட முடியுமா?
//
நல்லடியார், இதற்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை, இன்னொரு வேண்டாத சண்டை / சச்சரவுக்கு அது வழி வகுக்கும்.
நன்றி.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

*********** EDITED AND PUBLISHED BY BLOG ADMINISTRATOR ********************
////அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்க... ////அதேபோல் எந்த முஸ்லிம் பதிவராவது பிறமத தெய்வங்களையொ
அல்லது வேதங்களையோ அநாகரிகமாக விமர்சித்து எழுதியதைக் காட்ட முடியுமா? /////

நல்ல கூத்து. இந்த "அடியார்' அவர்கள் ********** பதிவுகளை கொஞ்சமும் படிப்பது இல்லை என்று ருஜூவாகிறது. காளி ஒரு
காட்டுமிராண்டி தைவம். இந்துக்கடவுள்கள் அசிங்கமானவர்கள். அவர்களுக்கு முதுகில் கை. இதெல்லாம் எழுதினது ஒரிஜினல் *********** இல்லையாமாம்!!

**************edited **********
நன்றி
(ஜயராமன்) 9/28/2006

said...

ஹஜ் மானியம் குறித்த விவாதம் இனிதே நிறைவடைகிறது...

நன்றி...

வணக்கம்.

said...

இவ்வளவு நடந்துருக்கா இங்கே

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails